/* */

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்: மாநில துணைத்தலைவர் பேட்டி

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என பாஜக துணைத்தலைவர் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்: மாநில துணைத்தலைவர் பேட்டி
X

டாக்டர் கே.பி. ராமலிங்கம்.

நாமக்கல் நகர பாஜக சார்பில், பாகஜ ஸ்தாபக தின விழா, நகர தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி ராமலிங்கம் நிகழ்ச்சியல் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ., நிறுவன நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகள் கொடியேற்றும் விழா, ரத்த தானம் முகாம் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை, வரும் 14 வரை மேற்கொள்கின்றனர். இந்த இயக்கம், அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கமாக இருந்து வருகிறது.

தற்போது, 2014 முதல், பாரத பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில், எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத ஒரு அரசியல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு அல்லது எந்த மந்திரி மீதும் மீதும் வழக்கு தொடர முடியாத அளவிற்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ. ஆட்சி தமிழ்நாட்டுக்கும் வரவேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

தமிழகத்தில், ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும். ஏற்கனவே இருந்த ஆட்சிகள், ஊழல் ஆட்சியாக இருந்து வருகிறது. தற்போது இருக்கின்ற ஆட்சி கூட ஊழல் உச்சமாக இருக்கிறது. மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியாக தரவேண்டும் என்ற நோக்கத்தோடு, அடித்தளத்தில் இருந்து உயர்ந்த இடத்துக்கு பா.ஜகவை வளர்த்து வருகின்றோம். தி.மு.கவுடனும் கூட்டணி வைத்துள்ளோம், அ.தி.மு.க.,விலும் கூட்டணி வைத்துள்ளோம். வேறு வழி இல்லாத காரணத்தால், சில நேரங்களில் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால், எந்தவித கூட்டணி பலமில்லாமல், பா.ஜ அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது, 8 மாத்தில், பல்வேறு குற்றச்சாட்டுகள் தி.மு.க ஆட்சி மீது வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மசோதாக்களை, அரசு வழங்கக் கூடிய திட்டங்களை, கவர்னர் நிறுத்தி வைக்க வில்லை. ஆட்சியாளர்கள் தவறு செய்யும் நிகழ்வுகளை, கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். அதற்கான விளக்கங்களை கேட்டுள்ளார். அதற்கான விளக்கங்களை, விளக்கக்கூடிய கடமை அரசுக்கு உள்ளது. எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும், கவர்னர் கையெழுத்து இல்லாமல் செயல்படுத்த முடியாது. அனைத்தையும் கவர்னர் தட்டிக்கேட்கவில்லை, தப்பு செய்யக்கூடியதை கவர்னர் தட்டிக்கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 7 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க