/* */

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர்

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர்
X

பட விளக்கம் : நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆட்சியர் உமா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர்

நாமக்கல், மார்ச் 8-

நாமக்கல்லில், வேளாண்மைத்துறையின் சார்பில், பராம்பரிய இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மைத்துறை சார்பில், பாரம்பரிய இயற்கை விவசாயம் குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா கண்காட்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்காக, வேளாண்மைத்துறையின் சார்பில் நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயத்தை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரிய வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ளுதல் ஆகும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 540 ஹெக்டர் பரப்பளவில் ரூ.48.37 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுப்பு குழுவிற்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு அங்ககச் சான்று வழங்கப்படும்.

பாரம்பரிய மற்றும் அங்கக சாகுபடி முறையில் ஆர்வம் உள்ள விவசாயிகளை தேர்வு செய்து 20 ஹெக்டர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சம் 2 ஹெக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. குழுவில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஹெக்டருக்கு தலா ரூ.12,000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. குழுக்களின் செயல்படுகளை விதைச் சான்று துறை மற்றும் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அங்கக சான்று பெறும்வரை தொகுப்பு குழுக்கள் வழிநடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். வேளாண்மைத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 8 March 2024 8:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்