/* */

ஆடி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆடி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆடி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்களிலும் அரசால் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, பக்தர்கள் வழக்கமான சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், ஆக. 5ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலும், மேலும், 13, 20, 27, ஆகிய தேதிகளில் ஆடி அமாவாசை மற்றும் ஆடி வெள்ளி தினங்களிள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வழக்கமான பூஜை வழிபாடுகள், திருக்கோயில் வழக்கப்படடி பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். முக்கிய பூஜைகள் இருப்பின் அவை ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது