/* */

நாமக்கல் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்

நாமக்கல் அருகே கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்
X

நாமக்கல் அருகே கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு மணியக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் யோகநாதன் (35). ஆயில் கடை நடத்தி வருகிறார். இவரும், அவரது உறவினர்களான அதே ஊரை சேர்ந்த செல்லம்மாள் (78), ராதாமணி (56), பழனிசாமி (58) ஆகியோரும் ஒரு காரில் சித்தோடு பகுதியில் இருந்து மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். நாகியம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (23) என்பவர் காரை ஓட்டி வந்தார். மாணிக்கம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த யோகநாதன், செல்லம்மாள், ராதாமணி, பழனிசாமி மற்றும் கார் டிரைவர் தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 April 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க