/* */

நாமக்கல்லில் நாட்டுச்சர்க்கரை ஆலை அமைக்க கோரிக்கை

நாமக்கல்லில் நாட்டுச்சர்க்கரை ஆலை அமைக்க கோரிக்கை
X

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் நாமக்கல்லில் நாட்டு சர்க்கரை உற்பத்தி ஆலையை தொடங்கினால் வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோரிக்கைகள் எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் வழியாக காவிரி ஆறு பாய்கிறது. இதனை பயன்படுத்தி கரையோர விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதனால் ஜேடர்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை மற்றும் பில்லிகல்பாளையம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சிலர் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் தங்கள் பகுதியில் கொட்டகை அமைத்து 250க்கும் மேற்பட்ட சிறு ஆலைகள் மூலம் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். தேவையை பொறுத்து வியாபாரிகள் ஆலைகளுக்கே வந்து நேரடியாக கொள்முதலும் செய்கின்றனர்.

நாட்டு சர்க்கரையின் மகத்துவத்தை அறிந்து பலர் நாட்டு சர்க்கரையை விரும்பி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தேவை அதிகரித்துள்ள போதும் பண்டிகை காலங்களை தவிர மற்ற நாட்களில் உற்பத்தியாளர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. ஒரு சில சமயங்களில் வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக நாட்டு சர்க்கரையின் விலை உயர்ந்து விடுகிறது என கூறப்படுகிறது.இந்த நிலைமையை போக்க நாமக்கல்லில் நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலையை அரசின் சார்பில் அமைக்க வேண்டும். இதனால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு நாட்டு சர்க்கரையை அரசே கொள்முதல் செய்து நுகர்வோருக்கு சரியான விலைக்கு கிடைக்க வழி ஏற்படும். இதனால் மேலும் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்பதால் இப்பகுதியில் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என கரும்பு விவசாயிகளும் நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 13 Jan 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!