/* */

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான லாரி.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் காங்கேயத்தில் இருந்து தவிடு பாரம் ஏற்றி கொண்டு மைசூருக்கு செல்வதற்கு ஒரு லாரி அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கொள்ளேகால் பகுதியை சேர்ந்த ஜெபி (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.

இதனைத் தொடர்ந்து, அந்த லாரி தாமரைக்கரை அருகே சென்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழி விடும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென மலைப்பாதையில் சாலையோர பள்ளத்தில் சாய்ந்து கவிழ்ந்தது. லாரி கவிழும் போது டிரைவர் வெளியே எட்டி குதிக்க முயன்றபோது லாரிக்கு அடியில் சிக்கி டிரைவர் ஜெபி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரி டிரைவர் ஜெபி உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 15 May 2024 10:13 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 2. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 3. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 4. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 6. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 7. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 8. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 9. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்