/* */

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோர் வாள் வீச்சு போட்டி

14 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் இன்றும் நாளையும் போட்டிகள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோர் வாள் வீச்சு போட்டி
X

14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் மோதும் வீரர்கள்.

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சி மாவட்ட பென்சிங் சங்கம் இணைந்து தமிழ்நாடு அளவிலான சப் ஜூனியர் பென்சிங்( வாள்வீச்சு) போட்டி இன்று காஞ்சிபுரத்தில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கியது.

மாணவ மாணவியர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சி மாவட்ட பென்சிங் சங்கம் சார்பில் 2024 க்கான மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட விளையாட்டுப் போட்டிகள் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வீரர் வீராங்கனைகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மூன்று பிரிவுகளின் கீழ் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்று 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டிகளை, மாநில பென்சிங் அசோசியேஷன் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன் , பட்டய கணக்காளர் ராஜசேகரன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தினகரன் உள்ளிட்ட துவக்கி வைத்தனர்.


போட்டியில் பங்கேற்ற அனைத்து வீராங்கனைகளுக்கும் மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் ஊக்கத் தொகையாக ரூபாய் 500 அளித்து வெற்றி பெற அனைத்து கடும் முயற்சிகளையும் மேற்கொண்டு பெற்றோர்களின் புகழினை உயர்த் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு சேபர் , எபிஇ, பாயில் ( Saber , Efee, Foil) ஆகிய ஓவ்வொரு பிரிவுகளின் 20 மேற்பட்ட வகையில் போட்டிகள் நடைபெறும் . போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் அன்று மாலை வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில் மாநில பென்சிங் அசோசியேசன் அடாக் கமிட்டி செயலாளர் கருணாமூர்த்தி , காஞ்சி மாவட்ட பென்சிங் அசோசியேஷன் தலைவர் விவேகானந்தன், செயலாளர் முருகேசன், செயலாளர், பொருளாளர் பாஸ்கரன் ,விழா ஒருங்கிணைப்பாளர் மலர்வண்னண், மனோகரன், சுந்தர், தொமுச மண்டல தலைவர் சுதாகரன், விளையாட்டு அலுவலர்கள் , ஜெயலட்சுமி, கார்த்திக், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு வீரர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Updated On: 2 March 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...