/* */

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள்

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள்
X

உடைந்த நிலையில் சிலைகள் மீட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் அருகே தொல்லியல் துறை திருக்கோயில் புனரமைக்கும் பணியின் போது உடைந்த நிலையில் உலோகத்திலான நடராஜர் மற்றும் அஸ்திராயர் சிலைகள் மீட்கப்பட்டன. சென்னையில் உள்ள தொல்லியத்துறை அலுவலகத்திற்கு சிலைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவன்கூடல் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலை தொல்லியல் துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கோயிலை சீரமைக்கும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக கோயிலின் வெளி பிரகாரத்தில் கருங்கல் தரை பதிக்கும் பணிக்காக மணல் பிரகாரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்திடும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்ட போது மண்ணுக்கு அடியில் உடைந்த நிலையில், உலோகத்திலான நடராஜர், அஸ்திராயர் சிலைகள் மற்றும் பீடம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து கோயிலுக்கு வந்த தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஜெ.பாஸ்கர், தொல்லியல் துறை ரசாயனர் ச.செந்தில்குமார், அறநிலையத்துறை ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் ஸ்ரீதரன், கோயில் தக்கார் சோ.செந்தில்குமார் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட சிலைகலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து சிலைகள் இரண்டாக உடைந்துள்ள காரணத்தாலும், அவை பூஜைக்கு ஏற்றதல்ல என்பதாலும் அவைகளைப் பாதுகாப்பதற்காக உடைந்த சிலைகளை தமிழக தொல்லியல் துறையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Updated On: 19 March 2024 3:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்