/* */

கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா

காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது

HIGHLIGHTS

கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா
X

காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் 1013 வது மகோத்சவ தேரோட்டத்தை ஒட்டி பக்தர்கள் வடம் பிடித்து நிகழ்வில் பங்கு கொண்டபோது.

பிரசித்தி பெற்ற கூரத்தாழ்வான் 1013வது திருவவதார மகோத்சவ தேரோட்ட திருவிழா, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கூரத்தாழ்வான் திருக்கோவில் உள்ளது.

இத்திருக்கோவில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதாரம் எடுத்த தை மாதத்தில் திருவாதாரம் மகாஉற்சவம் வெகுவிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 1013வது ஆண்டு திருவவதார திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் ஒன்பதாம் நாளான இன்று மகோத்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் பல்வேறு வீதிகளில் வீதி உலாவின் வந்து மாலை திருக்கோவிலில் வந்தடையும். திருதேரின் போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.இந்த திருத்தேர் உற்சவத்தை காண கிராம பொதுமக்கள், வெளியூர் பக்தர்கள் என ஏராளமான பக்தர்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு...



இக்கோயில் உண்டியல் 75 நாட்களுக்கு பிறகு திறந்து எண்ணபட்டதில் 87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும்,808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது.கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையான பீடங்களில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் மட்டுமன்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும்,வெளி நாட்டவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு உண்டியல்களில் பணம், தங்க நகை, வெள்ளி உள்ளிட்டவைகளை

காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.அந்தவகையில் 75 நாட்களுக்கு பிறகு கோயிலில் உள்ள இரண்டு நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில்திறக்கப்பட்டு கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைஎண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 87 லட்சத்து 9 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 808 கிராம் தங்கமும், 897.800 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.மேலும் இந்த உண்டியல் காணிக்கைகள் அனைத்தும் இந்தியன் வங்கியின் சங்கர மடம் கிளையில் வரவு வைக்கப்பட்டது.

இந்த உண்டியல் பணியின் போது காமாட்சி அம்மன் தேவஸ்தான ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர்,செயல் அலுவலர்கள்,இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Updated On: 9 Feb 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு