/* */

திருவண்ணாமலையில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் மறியல்
X

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  போக்குவரத்து தொழிலாளர்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.9) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மண்டல நிா்வாகி அ.சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் இரா.பாரி, எம்.வீரபத்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எம்.பிரகலநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். போராட்டத்தின்போது, ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பாக போக்குவரத்துக் கழக நிா்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாற்றில் பணிமனை முற்றுகை, சாலை மறியல்: 45 பேர் கைது

செய்யாற்றில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதேபோல பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 45 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமை அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, பாட்டாளி, சி.பி.எம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகைப் போராட்டம்

வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாளாக, புதன்கிழமை செய்யாறு பணிமனை நிா்வாகம் வழக்கம் போல பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த 4 தொழிற்சங்கங்களைச் சோந்த தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் என 45-க்கும் மேற்பட்டோா் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு வாயில் முன் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், சிறிது நேரம் பணிமனையிலிருந்து பேருந்துகள் வெளியே செல்லமுடியாமல் உள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

சிறிது நேர போரட்டத்துக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதும் கலைந்து சென்றனர், பணிமனையிலிருந்து பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குச் சென்று வழக்கம் போல இயக்கப்பட்டன.

தொழிலாளா்கள் சாலை மறியல்..

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க நிா்வாகி ரவி தலைமையில் தொழிலாளா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், தொழிலாளா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதால் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மதியம் 2 மணிக்கு மேல் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியது.

Updated On: 11 Jan 2024 1:10 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு