வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!

வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
X

உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கொண்டாடப்பட்டது.

உலக தாவர நல தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். பின்னர் தாவர நலத்தின் முக்கியத்துவத்தையும் குறிப்பாக எதிர்கால வேளாண்மையில் நாம் எதிர்நோக்கி உள்ள பல்வேறு சவால்களான காலநிலை மாறுபாடு, புதிய பூச்சி மற்றும் நோய்கள், பாதுகாப்பான வர்த்தகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நம் தொழில் நுட்ப உத்திகளை அதற்கு ஏற்ப போல் உருவாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று எடுத்துரைத்தார்.

முன்னதாக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் சாந்தி இந்த தினத்தினுடைய சிறப்பு மற்றும் நோக்கம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தேர்வு கண்காணிப்பாளர் முனைவர் பாலசுப்ரமணி தாவர நலம் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு அவற்றை சிறந்த முறையில் பேணிக்காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக துணைவேந்தர் தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில் நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வலைதள பயிலரங்கம் நடைபெற்றது. அதில் முனைவர் பிரசன்னா தாவர நலம் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். முனைவர் சோனை ராஜன் பாதுகாப்பான மற்றும் சரியான அளவு பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வினை மாணவரிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 450 க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு