/* */

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது

சுமார் 10 கிராம் அளவு உள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

HIGHLIGHTS

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது
X

போதைப்பொருட்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 10 கிராம் அளவு உள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஆஷ்மா கா துன் (40), ஜஹீரா கா துன் (29), இத்ரிஷ் அலி (29), குதிஜா கா துன் (37) , அலிஹீசைன் (48) மற்றும் ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேற்படி போதை பொருளை கடத்தி வந்து, இங்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

பி‌ன்ன‌ர் காவ‌ல் துறை‌யின‌ர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூபாய் 2,10,000/- மதிப்பு உள்ள சுமார் 10 கிராம் எடை உள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த மாதத்தில் முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் தற்போது வரை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடம் இருந்து சுமார் 54.160 கிலோ கிராம் எடை உள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On: 15 May 2024 1:45 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...