பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை

பிறந்த மூன்று மணி நேரத்தில் சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட திருநங்கை.

மதுராந்தகம் சுங்க சாவடி அருகே பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரம் வீசப்பட்ட பெண் குழந்தையை திருநங்கை மீட்டார்.

ஈவு இரக்கமில்லாமல் பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட திருநங்கை 108 அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்து *மரித்துப் போகவில்லை மனிதநேயம்* என உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை மார்க்கமாக செல்லும் சாலை ஓரத்தில் குழந்தை பிறந்து 3 மணி நேரத்திற்குள் ஆனபச்சிளம் பெண் குழந்தையை சாலை ஓரத்தில் வீசி சென்று உள்ளனர்.

இந்நிலையில் சுங்கசாவடி அருகே நின்று இருந்த திருநங்கை ஒருவர் சாலை ஓரத்தில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் இருக்கும் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சுற்றிலும் சுமார் அரை மணி நேரம் குழந்தையுடன் தாயைத் தேடி அலைந்து உள்ளார்.


அதனை தொடர்ந்து திருநங்கை அருகே உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தையை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைக்கு தேவையான முதலுதவி அளித்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு குழந்தை பாதுகாப்பிற்காக எடுத்துச் சென்றனர்.இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு குழந்தை பிறக்காதா? என்ற ஆதங்கத்தில் கருத்தரிப்பு மையங்களுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பிறந்த குழந்தையை அதன் தொப்புள் கொடி ஈரம் வாடுவதற்குள் சாலை ஓரம் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என தெரியவில்லை. அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story