/* */

தீபத்திருவிழா: திருவண்ணமலையில் தனியார் பேருந்துகள் ஓடாது

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் பேருந்துகள் ஓடாது என கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

HIGHLIGHTS

தீபத்திருவிழா: திருவண்ணமலையில் தனியார் பேருந்துகள் ஓடாது
X

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுலக கூட்டரங்கில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பவன்குமார்ரெட்டி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் பேருந்துகளை தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்த வேண்டும். மேலும் திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும் அதாவது 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 50 சதவீத பேருந்துகள் மட்டுமே திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை தவிர்த்து வேறு வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார்.

இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகம் விதித்திருக்கிற கட்டுப்பாடு காரணமாக பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறையும் அதனால் 50 சதவீத பேருந்துகளை இயக்கினால் எங்களுக்கு இழப்புதான் ஏற்படும் எனவே மூன்று நாட்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்குவதை தவிர்க்கவே நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறினர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நகரத்திற்கு வரும் பக்தர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக பணம் கேட்டால் உடனடியாக பக்கத்திலுள்ள காவலர்களிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அதிக பணம் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் லைசென்ஸ் மற்றும் பர்மிட் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

Updated On: 17 Nov 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது