/* */

திமுக - விசிக கூட்டணி பலமாக உள்ளது: தொல். திருமாவளவன்

தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கூட்டணி பலமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுக - விசிக கூட்டணி பலமாக உள்ளது:  தொல். திருமாவளவன்
X

கோப்பு படம்

திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், திமுக தலைவர் கூட்டணி நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார் எனவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திமுக தலைவரின் துணிச்சலான இந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தை கட்சி பாராட்டுகிறது. திமுக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும். காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால், அந்த கூட்டணி கரையேறாது. பா.ஜ.க.வையும் வீழ்த்த முடியாது. நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளுக்கும் அவர் உணர்த்தி உள்ளார்.

மேலும் மம்தா பானர்ஜி தனித்துப்போட்டியிடுவோம் என்று அறிவித்தது இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை நேரில் சந்தித்து தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை தெரிவித்து, அனைத்து பாஜக எதிர்ப்புச் சக்திகளும் ஓரணியில் திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாக பேச வேண்டும் .

பாமகவினர் அண்மையில் முதலமைச்சரை சந்தித்துப் பேசியதால் நான் அச்சப்படுவதாகவும் கலக்கமடைவதாகவும் கூறுகின்றனர். முதலமைச்சர் என்ற முறையில் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். குறிப்பாக பிரதமரை தான் சந்திப்பதால் பாஜகவுடன் இணைவதாக அர்த்தம் இல்லை. பாமகவிற்கு ஒரு கலாசாரம் உண்டு. கூட்டணியில் இருக்கும்போது அடுத்த தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்தக் கூட்டணியில் இருந்தார்களோ அந்த கூட்டணியில் இருந்து சற்று விலகி நிற்பார்கள்.

இதற்குக்காரணம் கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற இரண்டுத் தலைவர்களுக்கும் பாமக சார்பில் இந்த பக்கமும் பேச முடியும்; அந்தப் பக்கமும் பேச முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிப்பதாகவும், இதற்கு காரணம் பேரத்தை அதிகரிப்பதற்காக தான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகி நிற்கின்றனர். மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று திமுக கருதத் தேவையில்லை. திமுகவிற்கும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம் என்ற சிக்னல் தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தை உணர்த்துவதாக நம்புகிறேன். திமுக தலைமையிலான கூட்டணி அகில இந்திய அளவில் வழிகாட்டக்கூடிய வலிமை பெற வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வெற்றியை வழங்கி உள்ளனர்.

பா.ஜ.க., அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கட்சி நிதி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அனைத்தும் கணக்கில் வரும் பணம். கணக்கில் வராத பணத்தை தனியாக வைத்துள்ளனர். தங்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற வகையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். யாரிடம் கட்சி நிதி பெற்றார்களோ அவர்களுக்குத்தான் மத்திய பா.ஜ.க. அரசு ஒப்பந்த பணிகளை வழங்குகிறது. விலைவாசி உயர்வு கடுமையாக ஏறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமையல் எரிவாயு விலையை தற்போது உயர்த்தி உள்ளனர். பா.ஜ.க. மக்களுக்கான ஆட்சி நிர்வாகத்தை நடத்தவில்லை. அம்பானி, அதானி ஆகிய இரண்டு நபர்களுக்காக மத்திய அரசு ஆட்சி நடத்துகிறது எனக் கூறினார்.

Updated On: 4 March 2023 3:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு