/* */

ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு

ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
X

கொளுத்தும் வெயில்.

ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் மாவட்டமாக ஈரோடு மாறியது. கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் வாட்டி எடுத்தது. வெயிலின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி எந்த ஆண்டும் இல்லாத உச்ச அளவாக ஈரோடு மாவட்டத்தில் 111.2 டிகிரி பதிவாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், மாவட்டத்தில் 5வது நாளான இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. இதனால், ஈரோட்டில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் மக்கள் புலம்பி வருகிறார்கள்.

இக்கடுமையான வெயிலால் வீடுகளில் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர். இந்த கடுமையான வெயில் என்பது ஈரோடு மாவட்டத்திற்கு புதிது என்பதால் இதனை சமாளிக்க முடியாமல் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Updated On: 5 May 2024 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?