/* */

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் மகரிஷி பள்ளி, காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி மற்றும் குன்னம் ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
X

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வு மையத்திற்கு மாணவ, மாணவியர்களை அழைத்து வந்த பெற்றோர்கள்

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் நிலையில் மாணவர்கள் அனுமதி நடைபெற்று வருகிறது. முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது .

இதற்கான அறிவிப்புகள் முறையாக வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மாணவர்கள் தங்களது நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு முறையாக வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுங்குவார்சத்திரம் மகரிஷி பள்ளி, காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி மற்றும் குன்னம் பகுதியிலுள்ள ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

குருஷேத்ரா பள்ளியில் நடைபெறும் மையத்தில் 318 நபர்களும், சுங்குவார்சத்திரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெறும் மையத்தில் 960 நபர்களும், ஜே பி ஆர் பொறியியல் கல்லூரியில் 960 நபர்களும் என மொத்தம் 2238 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

மாலை 2.30 மணி அளவில் துவங்கும் தேர்வு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையத்திற்கு தேர்வு நேரத்துக்கு முன்பாகவே வர வேண்டும் என கூறியதின் அடிப்படையில் மாணவிகள் 11 மணி முதல் வர துவங்கினர்.

மாணவர்களை 12 மணிக்கு நுழைவுத் தேர்வு மையத்தில் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் நுழைவு சீட்டு, புகைப்படங்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவர்கள் பதிவு செய்யப்பட்டு தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர்

எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட எந்தவித மின்சாதன பொருட்களுக்கும் அனுமதி இல்லை என்பது கடும் கட்டுப்பாடாக உள்ளது. அனைவரும் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது .

Updated On: 5 May 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?