திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
Tirupur News- மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் துவங்கியது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கோவை மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் திருப்பூரில் இன்று தொடங்கியது.
இது தொடா்பாக கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் அளித்தல், அவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தமிழகம் முழுவதும் ‘ஜவகா் சிறுவா்’ மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவை மண்டலத்தின்கீழ் செயல்படும் திருப்பூா் மாவட்ட ‘ஜவகா் சிறுவா்’ மன்றத்தில் பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் 5 முதல் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருப்பூா் மண்ணரையில் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘ஜவகா் சிறுவா்’ மன்றம் செயல்பட்டு வருகிறது.
மாணவா்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையிலும், அவா்களின் கலைத் திறனை வளா்க்கும் விதமாகவும் கருமாரம்பாளையம் நகராட்சிப் பள்ளியில் மே 5-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியின் நிறைவில் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96779-65555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக் கால தடகளப் பயிற்சி முகாம் தொடக்கம்
திருப்பூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில், கோடைக் கால தடகளப் பயிற்சி முகாம் 5 இடங்களில் நேற்று, (சனிக்கிழமை) தொடங்கியது.
தடகளப் பயிற்சியாளா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இப்பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஒரு மாத காலம் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்: உடுமலை யூ.ஜி.ஏ.சி. மைதானம், ராக்கியாபாளையம் ஐ வின் ட்ராக் ஸ்போா்ட்ஸ் கிளப், சாமளாபுரம் ஏ.வி.ஏ.டி. பள்ளி மைதானம், காங்கேயம் ரன்னா்ஸ் கிளப் மைதானம், கருவலூா் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மைதானம் ஆகிய 5 இடங்களில் இலவசமாக தடகளப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதில், பங்கேற்க விரும்புபவா்கள் 86677-99305, 97861-25453, 97888-30840, 96596-62412, 95970-50550 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu