/* */

திருவண்ணாமலையில் நாளை முதல் 20-ந் தேதி வரை சாமி தரிசனம், கிரிவலம் செல்ல தடை

தீபத் திருவிழாவையொட்டி 17 முதல் வருகிற 20-ந் தேதி வரை கோவிலில் தரிசனம் மற்றும், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நாளை முதல் 20-ந் தேதி வரை சாமி தரிசனம், கிரிவலம் செல்ல தடை
X

அண்ணாமலையார் கோவில் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற்று வருகிறது. காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமியன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத் தரிசனம் செய்யவும், நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது