/* */

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்த்தல் குறித்த அறிவிப்பு

திருவண்ணாமலையில் 26.07.2021-ம் தேதி முதல் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதிதேர்வு ஆகியவை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்த்தல் குறித்த அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்புவீரர் ஆகிய பதவிக்கான எழுத்துதேர்வில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 26.07.2021-ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல். உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதிதேர்வு ஆகியவை நடைப்பெறவுள்ளது. மேற்படி தேர்வில் கலந்துக்கொள்ள வரும் விண்ணப்பதார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

1.உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை கொண்டுவர வேண்டும். [விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.]

2.தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்டநேரத்தில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3.தேர்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக கோவிட்-19 பரிசோதனை செய்து அதற்கான மருத்துவசான்று எடுத்துவர அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு மருத்துவசான்று பெற்று வராத தேர்வாளர்களுக்குஅனுமதி மறுக்கப்படும்.

4.தேர்வாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையில் positive என தெரியவந்தால், தேர்வாளரின் பெற்றோர் / பாதுகாவலர், தேர்வாளரின் தேர்வு நாளன்று மருத்துவசான்றை தேர்வுமைய தலைவரிடம் நேரில் சமர்பிக்கவும் .அத்தேர்வாளரின்தேர்வுநாள் பின்னர் அறிவிக்கப்படும்.

5.தேர்வாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் கைவசமாக இரண்டு முகக்கவசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

6. தேர்வாளர்கள் கலந்துகொள்ளவரும் போது ஏதாவது அரசு அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (AADHAR, PAN, VOTER ID, etc) கொண்டுவர அறிவுறுத்தப்படுவதோடு, அசல் சான்றிதழ்கள் கட்டாயமாக கொண்டு வரவேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.

7. தேர்வாளர்கள் உடற்தகுதி தேர்வில் பங்குபெறும் போது அணிந்து வரும் T-Shirt,TRACK SUIT, SHORTS ஆகிய ஆடைகளில் எந்த ஒரு அடையாளகுறியீடு, சின்னங்கள், பெயர்கள் மற்றும் பலவண்ணநிறங்களில் (MULTI COLORS) ஆடைகள் அணிந்துவரக்கூடாது. பிளையின் கலர்ஸ் கொண்ட ஆடைகள் மட்டும் அணிந்துவர அறிவுறுத்தப்படுகிறது.

Updated On: 22 July 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து