/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்ட தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம் மாநில தொமுச பேரவை செயலாளர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

நேற்று மாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலை காமராஜர் சிலையில் அருகில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம் தொடங்கியது.

மே தின ஊர்வலத்திற்கு மாநில தொமுச பேரவை செயலாளர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் நடராஜன், மண்டல பொருளாளர் மோகனரங்கன் ,துணைத்தலைவர் ஆறுமுகம், மின்னல் பாபு, மின்சார வாரிய தொமுச பேரவை துணைத் தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொமுச செயலாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருவண்ணாமலை காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்ட மே தின ஊர்வலம் திருமஞ்சன கோபுர வீதி ,கற்பக விநாயகர் கோவில், பெரிய கடை தெரு, திருவுடல் தெரு, தேரடி தெரு, காந்தி சிலை வழியாக அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மாநில பேரவை செயலாளர் சௌந்தர்ராஜன் , திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆகியோர் மே தின சிறப்புரையாற்றினர்.

முன்னதாக மே தின ஊர்வலத்தில் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற போர் பறை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் நேரு ,மெட்ராஸ் சுப்பிரமணியன் ,ஷாஜகான், பாலச்சந்தர், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி . நகர மன்ற உறுப்பினர்கள் , அணி அமைப்பாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள், மின்சார வாரிய தொமுச பேரவை உறுப்பினர்கள் , திருவண்ணாமலை தொமுச பேரவை உறுப்பினர்கள் , தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர்

Updated On: 2 May 2024 2:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...