/* */

டிஎன்பிஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

டிஎன்பிஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்
X

திருவண்ணாமலையில் டிஎன்பிஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிக்கவுள்ள குருப் 2, 2A-ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பிப்ரவரி 17 ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் 17.02.2021 முதல் நேரடி வகுப்புகளாக நடைபெறவுள்ளது.போட்டித் தேர்விற்கு தயாராகும் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17.ம் தேதி நேரடியாக இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 13 Feb 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பள்ளி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை...
  2. சினிமா
    முதல்வன் கதையில் சிவகார்த்திகேயன்..! வெங்கட்பிரபு இயக்கத்தில்...!
  3. காஞ்சிபுரம்
    கடத்தலுக்கு வைத்திருந்த ரேஷன் அரிசி 2870 கிலோ பறிமுதல்.
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கிடாமுட்டு போட்டி..!
  5. கவுண்டம்பாளையம்
    நீட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் : ஜி. கே. வாசன் வேண்டுகோள்..!
  6. திருமங்கலம்
    மதுரையில் ,பாஜக திருச்சி சூர்யா பேட்டி:
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சூரிய அஸ்தமன கண் தோற்றத்தை எப்படி உருவாக்கலாம்?
  8. சோழவந்தான்
    பரவையில் கைவினைப் பொருள் கண்காட்சி..!
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
  10. திருப்பரங்குன்றம்
    வாடிப்பட்டி அருகே பாலம்மாள் ஆலய கும்பாபிஷேகம்..!