/* */

கடத்தலுக்கு வைத்திருந்த ரேஷன் அரிசி 2870 கிலோ பறிமுதல்.

காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழு பறிமுதல் செய்தது.

HIGHLIGHTS

கடத்தலுக்கு வைத்திருந்த ரேஷன் அரிசி 2870 கிலோ பறிமுதல்.
X

காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற போது அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தலைமையில், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, தலைமைக்காவலர் ஆகியோர்களுடன் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் தணிக்கை மேற்கொண்டனர்

அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டம், தாயார்குளம் அண்ணா பூங்கா அருகில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது TN 10 AT 8835 Dost Van என்ற வாகனத்தில், 60 சிப்பங்களில் 2870 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால் மகஜர் சாட்சிகளின் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 2870 கிலோ பொது விநியோகத்திட்ட அரிசியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிறுகாவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 11 Jun 2024 2:45 PM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு