மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!

மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!

மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வராகியம்மன் சிறப்பு பூஜை.

மதுரை நகர் பகுதிகளில் உள்ள கோயில்களில் பஞ்சமியையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மதுரை.

மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞாசமியை முன்னிட்டு, வராகி சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், கோவில் சார்பில் சண்டி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்

தொடர்ந்து, வராகி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில், பால், தயிர், மஞ்சள் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, அலங்காரமாகி வராஹி அம்மனுக்கு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்திருந்தனர். இக்கோயிலிலே, மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்களில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதை அடுத்து, அர்ச்சனைகள் நடைபெறும்.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயம், யானைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில், பஞ்சமியை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள்நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு, பிரசாதங்கள் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story