ஈரோட்டில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு

ஈரோட்டில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு

1962 கால்நடை ஆம்புலன்ஸ்.

ஈரோட்டில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 10ம் தேதி நேர்முகத்தேர்வு நடக்கிறது.

ஈரோட்டில் 1962 கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) நேர்முகத்தேர்வு நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அரசு நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை அவைகளின் இருப்பிடத்திற்கு சென்று வழங்குவதற்கு விலங்குகளுக்கு என பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவையை இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீசஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இந்த சேவையை 1962 என்ற எண்ணின் மூலம் விரைவில் தமிழகமெங்கும் விரிவுபடுத்த உள்ளது.

இதில் பணிபுரிய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு வகையான ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 1962 கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கு வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை நேர்முகத்தேர்வு நடக்கிறது.

ஓட்டுநர் பணிக்கு:-

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது: நேர்முகத் தேர்வு அன்று 24 வயது குறையாமலும் மற்றும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலினம்: ஆண்.

பணி நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 வரை.

உயரம்: 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ச் வாகன உரிமம்.

அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,820 ஆகும்.

உதவியாளர் பணிக்கு:-

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்/உறுப்புக் கல்லூரிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடத்தப்படும் எந்தவொரு பயிற்சி வகுப்பையும் முடித்த விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனுபவம்: ஆறு மாதம் (சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சி/ அனுபவம்)

பாலினம்: ஆண்

பணி நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 வரை.

தேர்வு முறை: 1.எழுத்துத் தேர்வு 2.நேர்காணல்

சம்பளம்: ரூ.15,725 ஆகும்.

தேர்வு முறை: 1.எழுத்துத் தேர்வு 2.தொழில்நுட்பத் தேர்வு 3. மனிதவள துறை நேர்காணல் 4. கண்பார்வை & மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு 5. சாலை விதிகளுக்கான தேர்வு.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக எடுத்து வரவேண்டும்.

வெளியூரில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்து ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 7397724813, 7338894971,9944426044 என்ற தொலைபேசி எண்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத்திற்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தை அணுகவும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story