வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் சீல் வைப்பு..!

வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் சீல் வைப்பு..!
ஈரோடு மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைத்து சீலிடப்படும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.
ஈரோடு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டன.

ஈரோடு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிவடைந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப்பதிவிற்காக 2,222 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து, பாதுகாப்பு இருப்பறையில் வைத்து, சீலிடும் பணிகள் இன்று நடைபெற்றது.


இப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 239 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 478 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 242 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் இருப்பறையில் வைத்து சீலிடப்பட்டன.

இதேபோல், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 302 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 604 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 304 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 278 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 556 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 278 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பாதுகாப்பாக சீலிடப்பட்டன.

அதேபோல், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் 264 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 265 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 269 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், பவானி சட்டமன்றத் தொகுதியில் 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 292 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 294 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பாதுகாப்பாக சீலிடப்பட்டன.


தொடர்ந்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் 262 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 262 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 264 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 298 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 298 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 305 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பாதுகாப்பாக சீலிடப்பட்டன.

மேலும், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் 296 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 592 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 297 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 2,231 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,347 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,253 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பாதுகாப்பு இருப்பறை வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

இப்பணியின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), ஈரோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சதீஷ்குமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, மாவட்ட மேலாளர் (சில்லறை வணிகம்) அம்சவேணி, வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story