/* */

பரவையில் கைவினைப் பொருள் கண்காட்சி..!

பரவையில் கிராமப்புற பெண்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பரவையில் கைவினைப் பொருள் கண்காட்சி..!
X

ஜி.எச்.சி. எல் பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் மற்றும் பெட் கிராட் இணைந்து நடத்திய கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், பரவை ஜி.எச்.சி. எல் பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் மற்றும் பெட் கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்தது.

இந்த கண்காட்சிக்கு, மீனாட்சி மில்ஸ் முதன்மை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொழிற்சாலை தொடர்புஅதிகாரி அசோக்குமார், மூத்த பொது மேலாளர் ராஜகோபால், துறைத் தலைவர்கள் தினேஷ், கவ்ரவ், துணை மேலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இந்த கண்காட்சியில், பரவை, தேனூர், திருவேடகம், நெடுங்குளம்,திருவாலவாயநல்லூர் ஆகிய கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் 3 மாத பயிற்சி முடித்து குழுவாக உருவாக்கிய ஜூட் பேக், ஆரி எம்ப்ராய்டிங் ஆகியவற்றில் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில், பெட் கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் சாரள் ரூபி, பயிற்சியாளர்கள் கண்ணன்,முத்துசெல்வி மற்றும் ஆலை அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்காட்சி பார்வையிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதன் ஏற்பாடுகளை நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் செய்திருந்தார். முடிவில் பெட் கிராட் தலைவர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

Updated On: 11 Jun 2024 2:15 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
 2. திருவண்ணாமலை
  அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவள்ளூர்
  கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
 6. நாமக்கல்
  108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 9. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 10. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி