/* */

நெல்லை மண்டலத்திலிருந்து 250 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

திருநெல்வேலி மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

HIGHLIGHTS

நெல்லை மண்டலத்திலிருந்து 250 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை அறிவிப்பு!
X

கோப்புப்படம் 

திருநெல்வேலி மண்டலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மேலும் 1 வார காலம் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வரும் ஜூன் 7ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சூழ்நிலையில், விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றவர்கள், சுற்றுலா சென்றவர்கள் என அனைவருக்கும் உதவும் வகையில், கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது தமிழக போக்குவரத்து துறை.

7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்கள் பேருந்துகளைப் பிடிக்க சிரமமப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை விடவேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு.

தற்போது திருநெல்வேலி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளையும் 250 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்பட்டாலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மண்டலமான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை மற்றும் கோவைக்கு தலா 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூருக்கு 30 சிறப்பு பேருந்துகளும், மதுரைக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2023 1:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...