/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ வழக்கில் கைதானவர்கள் 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி அதிரடி
X

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேரந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (45) என்பவரை 17.09.2021 அன்று திம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் ஆறுமுகம் (31) மற்றும் சொர்ணராஜ் (28) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த எஸ்தோ ஜோ (எ) தர்மராஜ் மகன் நிர்மல்குமார் (38) என்பவர் கடந்த 08.07.2021 அன்று 10 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அங்கமங்கலம் அன்னாநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துக்குமார் (42) என்பவர் 4½ வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

மேற்கண்ட வழக்குகளின் முக்கிய எதிரிகளான ஆறுமுகம், சொர்ணராஜ், நிர்மல்குமார், முத்துக்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதற்கான ஆணையை சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் உட்பட 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Updated On: 9 Oct 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்