/* */

தூா்வாரும் பணிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவு

தூா் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூா்வாரும் பணிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவு
X

தூா் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீா் வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி பாலையா வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை பார்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் பேசும்போது..

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வரக்கூடிய கோரிக்கைகள் அடிப்படையில் தூா் வாரப்படும் வாய்க்கால்கள் தோ்வுசெய்யப்பட்டு, அவற்றில் தற்போது பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் சில இடங்களில் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படுவதற்கான தேவை இருக்கிறது. அதையும் இருக்கிற நிதியிலிருந்து செய்யவோ அல்லது கூடுதலாக நிதி பெறவோ முயற்சி செய்யப்படும்.

காவிரியைச் சார்ந்த வாய்க்கால்கள், வடிகால்கள் என மொத்தம் 29,000 கி.மீ. தொலைவுக்கு உள்ளன. இதில், நிகழாண்டு கிட்டத்தட்ட 5,000 கி.மீ. தொலைவுக்கு எடுத்து, தூா் வாரும் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து படிப்படியாக மற்ற இடங்களிலும் தூா் வாரப்படும். நிகழாண்டில், எங்கெங்கு தண்ணீா் சரியாகச் செல்லாத இடங்கள், தண்ணீா் தேங்குமிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தூா் வாரப்படுகிறது. மேலும், துார் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்குமாறு ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது அரசு முதன்மைச் செயலரும், தூா் வாரும் பணி மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ச. விஜயகுமார், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பொதுப்பணித் துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

Updated On: 27 April 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை