/* */

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்

சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்

HIGHLIGHTS

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்
X

சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தஞ்சாவூா் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், தஞ்சாவூா் - கறம்பக்குடி சீதாம்பாள்புரம் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில், அண்ணா நகா் - நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை இடையே 2.50 கி.மீ தொலைவுடைய, தற்போதுள்ள இரு வழித்தட சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை நகரை இணைக்கக்கூடிய சாலையாக நாஞ்சிக்கோட்டை சாலை அமைந்துள்ளது. இருவழி சாலையாக இருந்ததை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்காத அளவுக்கு நடைபாதையுடன் கூடிய வடிகால் சாலையின் இருபுறமும் அமைக்கப்படுகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வீடுகள் பகுதியளவில் இடிக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பணிகள் சுமார் ரூ. 8 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடிவடையும். ஆக்கிரமிப்புகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 5 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்