/* */

தென்காசியில் மக்கள் நலப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசியில் நிரந்தர பணி ஆணை வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

தென்காசியில் மக்கள் நலப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
X

பட விளக்கம்: தென்காசி புதிய பேருந்து நிலைய முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தென்காசியில், பணி வரையறையுடன் கூடிய பணி நிரந்தர ஆணை வழங்க கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில், தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதிய பேரூந்து நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், மாவட்டத்திற்குள் பணி இட மாறுதல் செய்ய வேண்டும், 1.07.2022 -ல் பணியில் சேர்ந்து இறந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் கூப்பிட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்