/* */

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்ற கோரிக்கை..!

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை  காலாண்டு வரியாக மாற்ற கோரிக்கை..!
X

சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை, காலாண்டு வரியாக மாற்றம் செய்யக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு, வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் :

தமிழகத்தில், சுற்றுலா வாடகை வாகனங்களுக்கான ஆயுள் வரியை, காலாண்டு வரியாக மாற்றம் செய்ய வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, சுற்றுலா வாகன ஆலோசகர் பாளையங்கோட்டை ஐயா தலைமையில், நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகனங்கள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள்ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மோட்டார் வாகன தொழில் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டணம் உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்த வாடகை வாகனங்களுக்கு சாலை வரி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு காலாண்டு வரியை செலுத்தும் முறையை மாற்றி, அனைத்து பழைய வாகனங்களுக்கும் ஆயுள் வரியாக (லைஃப் டேக்ஸ்) செலுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வால் பல மேக்சி-கேப் வாகனங்கள் எப்.சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் வாகனங்களை ஓட்டும் வாடகை வண்டிகள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆயுள் வரி பிரச்சினையால் பல வாகனங்களை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் டிரைவர்களும், உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் மேக்சி கேப் வாகனங்களுக்கு, ஆயுள் கால வரியை நீக்கி, மீண்டும் காலாண்டு வரியாக மாற்ற வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 Dec 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்