/* */

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மாணவ மாணவிகளும், கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்த மாணவ மாணவிகளும், கிராம மக்களும் 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பெரியசோளிபாளையம் கிராம மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே உள்ள பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக பரமத்திவேலூர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள்.

இதுபோல் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர். இந்த பகுதியில், பேருந்து வசதி இல்லாததால் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் ஏறத்தாழ 7 கி.மீ., தூரம் நடந்து கபிலர்மலை சென்று பின் அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பு தொழிலாளர்களுக்கும் மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

பேருந்து வசதியில்லாதது தொடர்பாக ஏற்கனவே பல முறை புகார் செய்துள்ளோம். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Updated On: 10 Oct 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்