எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
பொது மாறுதல் கேட்டு தமிழகம் முழுவதும் எமிஸ் தளத்தில் 13, 484 ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி வருகிற 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகும். இந்த நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3 ஆயிரத்து 333 ,பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1790 ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891 ,நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5869 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுபோல பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168 ,பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375 ,முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 2,748 ,உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178 ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 7615 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன.
ஆக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் எமிஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் போட்டி போட்டு விண்ணப்பிப்பதால் எமிஸ் தளம் நேற்று முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu