/* */

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் உதத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சுகாதார பணிகளை பொது சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கண்டறியப்படும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.

கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்து தினசரி குளோரினேசன் செய்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல், சாக்கடை அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Sep 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க