/* */

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர் முகாம்..!

நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடக்கவுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில்  ரேசன் கார்டு குறைதீர் முகாம்..!
X

ரேஷன் அட்டை (கோப்பு படம்)

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 9 ம் தேதி 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு கோருதல், செல்போன் நம்பர் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்வதற்காக ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேசன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் முகாம், வரும் 9ம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர். சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கும், இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jan 2024 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்