/* */

நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.பி. அறிக்கை

நாமக்கல்லுக்கு ஜூலை 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல்லுக்கு முதல்வர் வருகை தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.பி. அறிக்கை
X

ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல்லுக்கு ஜூலை 3ம் தேதி வருகை தரும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கிழக்கு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் வருகிற ஜூலை 3ம் தேதி, நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், முதல்வருக்கான வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, நகரம், ஒன்றியம் மற்றும் டவுன் பஞ்சாயத்து வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

23ம் தேதி காலை 10 மணிக்கு ராசிபுரம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு நாமக்கல் கிழக்கு நகர ஆலோசனைக் கூட்டம், கொசவம்பட்டி என்.ஆர்.எல். திருமண மண்டபத்திலும், 12.30 மணிக்கு நாமக்கல் மேற்கு நகர ஆலோசனைக் கூட்டம் நல்லிபாளையம் செந்தூர் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு புதுச்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியக் கூட்டம், புதன்சந்தை செல்வலட்சுமி திருமண மண்டபத்திலும், இரவு 7 மணிக்கு நாமக்கல் தெற்கு நகரக் கூட்டம் கவின் கிஷோர் திருமண மண்டபத்திலும் நடைபெறும்.

24ம் தேதி காலை 9 மணிக்கு பட்டணம் டவுன் பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம் கருப்பனார் கோயில் மண்டபத்தில் நடைபெறும். 10 மணிக்கு ராசிபுரம் ஒன்றியக் கூட்டம் சுமங்கலி மஹாலில் நடைபெறும். 11 மணிக்கு பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம் கந்தவிநாயகர் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெறும். மாலை 4 மணிக்கு மோகனூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மோகனூர் டவுன் பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம் சர்மி மஹாலில் நடைபெறும்.

25ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சேந்தமங்கலம் ஒன்றியம், கொல்லிமலை ஒன்றியம், காளப்பநாய்க்கன்பட்டி, சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம்ல சேந்தமங்கலம் வசந்த மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும். காலை 11.30 மணிக்கு நாமக்கல் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் கீரம்பூர் டோல்கேட் சங்கீதா திருமண மஹாலில் நடைபெறும். மாலை 4 மணிக்கு நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கூட்டம் ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் நடைபெறும். மாலை 5 மணிக்கு சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து கூட்டம் நகர செயலாளர் செல்வராஜ் வீட்டில் நடைபெறும். மாலை 6 மணிக்கு ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம் சமுதாயக்கூடத்தில் நடைபெறும். 7 மணிக்கு நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் நடபெறும்.

26ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு வெண்ணந்தூர் ஒன்றியக் கூட்டம் பாலாஹி மஹாலில் நடைபெறும். 11 மணிக்கு வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம் ஏகாம்பர முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறும். 12 மணிக்கு அத்தனூர் டவுன் பஞ்சாயத்து கூட்டம் சமுதாயக்கூடத்தில் நடைபெறும். மாலை 5 மணிக்கு எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் டவுன் பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் நடைபெறும்.

கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த, மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!