/* */

பெட்ரோல் விலை உயர்வு: நாமக்கல்லில் ஒரு லிட்டர் டீசல் ரூ.99.90

நாமக்கல் மாவட்டத்தில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100ஐ நெருங்குகிறது.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வு:  நாமக்கல்லில் ஒரு லிட்டர் டீசல் ரூ.99.90
X

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு சமமாக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணை கம்பெனிகள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 வாரங்கள் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்திலும், நவராத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற விடுமுறை நாட்களிலும் எண்ணை கம்பெனிகள் தவறால் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இதனால் லாரி, பஸ், டாக்சி உரிமையாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தினசரி டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் சரக்குப் போக்குவரத்து தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது.

இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இன்றைய விலை நிலவரம்: பெட்ரோல் விலைஒரு லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.103.93 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ. 107.49 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!