நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3 பேருக்கு வலை..!

நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி-  வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3 பேருக்கு வலை..!
X

கோப்பு படம் 


தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாமக்கல்:

தனியார் நிதி நிறுவன பணியாளரை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவான, சிறுவன் உள்பட, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மோகனூர் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (30). அவர், மோகனூர் அருகில் உள்ள காட்டூரில் உள்ள தனியார் பைனான்ஸ் ஒன்றில், சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த 17 ம் தேதி, இரவு 7 மணிக்கு பணியை முடித்துக் கொண்டு அவர் டூ வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விக்ரம், சவுந்தர்யன், வாங்கலை சேர்ந்த மணி மற்றும் 18 வயது வாலிபர் உள்ளிட்ட 4 பேர் ரோட்டில் உட்கார்ந்து மது அருந்திக்கொடிருந்தனர்.

அதைக்கண்ட லோகநாதன் ரோட்டில் ஏன் மது குடிக்கிறீர்கள் என கேட்டுவிட்டு, டூ வீலரில் தொடர்ந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற 4 பேரும் அவரை வழிமறித்து, டூ வீலரில் இருந்து கீழே தள்ளி, கத்தியால் குத்தினார்கள். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்து ரூ. 500 ஐ எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்தனர். இதைக்கண்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கத்தியால் குத்தியதால் காயமடைந்த லோகநாதன் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து சவுந்தர்யனை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய விக்ரம், மணி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business