நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
தேனி இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வாரவழிபாட்டு கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட இந்துஎழுச்சி முன்னணி கார்யாலயத்தில் வார வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் இளம்பரிதிஜீ தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டியன்ஜீ முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ வழிநடத்தினார். நிறுவனத்தலைவர் ரவிஜீ உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் கோடை மழையின் காரணமாக நீர் நிலைகளில் தேங்கும் தண்ணீர் மற்றும் ஆறுகளில் ஏற்படும் திடீர் காட்டாற்று வெள்ளம் இவற்றால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைப்பதோடு நீர் நிலைகள் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க ஆவண செய்யுமாறு தமிழக அரசை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் நமது இயக்கப் பொறுப்பாளர்கள் நேரம் கொடுத்து இயக்கத்தின் வளர்ச்சிக்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது
தேனி நகரில் சில ஆண்டுகளாக மதுரை ரோட்டில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளின் காரணமாக பொதுமக்களுக்கு போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மேம்பால பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu