வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!

வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
X

சிறப்பு அலங்காரத்தில் வாசவி அம்மன்

கீழ்பெண்ணாத்தூரில் வாசவி அம்மன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் வாசவி அம்மன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் காந்தி தெருவில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது. ஆரிய வைசிய சமாஜத்திற்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த வாசவி ஜெயந்தி விழாவையொட்டி காலையில் புனித நீர் கலசம் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஆரிய வைசிய பெண்கள் பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். பின்னர் மூலவர், உற்சவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது . மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மஞ்சள் அரைத்து அம்மனை மலர் மாலைகளால் அலங்கரித்தும் உற்சவர்கள், அம்மன், விநாயகருக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வேள்வி பூஜை சிறப்பு வழிபாடுகள் மகாதீபாரதனையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக பெண்கள் மாவிளக்கு தட்டுகளை அமைத்து படைத்தனர் . இதில் ஆரிய வைசிய சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் சமாராதனையும் அன்னதானமும் நடந்தது.

நேற்று மாலை ஊஞ்சல் சேவையும், அதைத்தொடர்ந்து சிறுவர் சிறுமியர் மற்றும் அனைத்து வயதினரும் கலந்து கொண்ட பல்வேறு போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், திரளான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இந்த விழாவை ஒட்டி ஆரிய வைத்தியர்களின் அனைத்து வணிக நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. வழிபாடு நிகழ்ச்சிகளை கோயில் புரோகிதர்கள் பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு