/* */

ஜேடர்பாளையம் நித்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்; மா.கம்யூ. கட்சி வரவேற்பு

namakkal news, namakkal news today- ஜேடர்பாளையம் நித்தியா படுகொலை வழக்கு சிபி சிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் நித்யா கொலை வழக்கு  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்; மா.கம்யூ. கட்சி வரவேற்பு
X

namakkal news, namakkal news today- கொலை செய்யப்பட்ட நித்யா (பைல் படம்)

namakkal news, namakkal news today- இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள வடகரையாத்தூர் பஞ்சாயத்து, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரது மனைவி நித்தியா கடந்த 11.3. 2023 அன்று, பாலியல் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜேடர்பாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கில், 17 வயது சிறுவன் குற்றவாளி என கைது செய்துள்ளனர். ஒரு சிறுவனால் மட்டுமே இந்த படுகொலையை செய்திருக்க முடியாது என அப்பகுதி மக்களுக்கு பெரும் சந்தேகம் இருந்து வருகிறது. எனவே உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என நித்தியாவின் குடும்பத்தாரும் அவர்களது உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் தொடர்ந்து போராடி வந்தது.

கடந்த, மே 9,10 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில், நித்தியாவின் படுகொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று 14ம் தேதி அந்த வழக்கை, தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. சிபிசிஐடி போலீசார் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்.

அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும், தீ வைப்பு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வந்து அப்பகுதியில் அமைதி திரும்பவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 15 May 2023 3:58 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  5. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  6. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  7. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!