தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
X

வைகை அணை - கோப்புப்படம் 

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேல் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு மழையில்லை. அதுவும் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கோடை மழை தொடங்கியது.

ஒரு வாரத்திற்கும் மேல் ஆங்காங்கே பெய்த கோடை மழையால் பருவநிலையில் மட்டும் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டதே தவிர நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏதும் இல்லை. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி பரவலாக மழை பெய்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 3 மி.மீ., வீரபாண்டியில் 2 மி.மீ., பெரியகுளத்தில் 5.2 மி.மீ., மஞ்சளாறில் 3 மி.மீ., சோத்துப்பாறையில் 14 மி.மீ., வைகை அணையில் 16.8 மி.மீ., போடிநாயக்கனுாரில் 2.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.2 மி.மீ., கூடலுாரில் 3.6 மி.மீ., பெரியாறு அணையில் 40 மி.மீ., தேக்கடியில் 7.4 மி.மீ., சண்முகாநதியில் 3.2 மி.மீ., மழை பெய்தது.

இந்நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடங்கி 10 நாட்களை கடந்து விட்ட நிலையில், வைகை அணைக்கு விநாடிக்கு 400 கன அடி நீரும், பெரியாறு அணைக்கு விநாடிக்கு 650 கனஅடி நீரும் வந்து கொண்டுள்ளது. இந்த நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து தொடங்கி உள்ளது. அணைகளின் நீர் மட்டம் ஓரளவு திருப்தியாக உள்ள நிலையில் கோடை மழை காரணமாக விவசாயப்பணிகள் தொடங்கி உள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!