/* */

நாமக்கல்: முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

HIGHLIGHTS

நாமக்கல்: முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்  12,682 பேருக்கு சிகிச்சை
X

தமிழக முதல்வரின் முதல்வரின், விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17.22 கோடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 2021 மே 7 முதல், தற்போது வரை, 1,268 பேருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 3,893 பேர், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேர், புற்றுநோய் சிகிச்சை 381 பேர், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேர், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேர், தண்டுவடம் சிகிச்சை 106 பேர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை 479 பேர், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேர், என மொத்தம் 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Jun 2023 3:01 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து