/* */

செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

செப். 1ம் தேதிக்கு  முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா  தடுப்பூசி
X

வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில், வரும் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள கொரோனா நெறிமுறைகள பள்ளிகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அலவாய்ப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளியில் மாஸ்க், சானிட்டைசர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், தெர்சல் ஸ்கேனர் ஆகியவை போதுமான அளவில் இருப்பில் உள்ளதா என்பதை தணிக்கை செய்தார்.

பின்னர், பள்ளி வளாகம், கழிப்பறைகள், வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை குறித்து ஆய்வு செய்தார்.

ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, பள்ளி மாணவிகள் எண்ணிக்கை, பள்ளி செல்ல குழந்தைகள் கணக்கெடுப்பு, ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட விவரம் ஆகியவற்றை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் முன்பு போட்டுகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது அலவாய்ப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பேபி லதா, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 26 Aug 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்