/* */

நாமக்கல்: கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 6 பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில், கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன், 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 6 பேருக்கு சிகிச்சை
X

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின், இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீன் அலுவலர் டாக்டர் சாந்தா கூறியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் கறுப்பு பூஞ்சை நோய் பரவ துவங்கி உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அந்நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.

அதில், தற்போது 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2 பெண்கள் உள்பட, 3 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற, 3 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் வாய்வழியாக வழங்கப்படும் மருந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மற்றொரு நபர், மேல்சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 3 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க