/* */

மூதாட்டியிடம் நகை பணம் கொள்ளை: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை

புதுச்சத்திரம் அருகே மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மூதாட்டியிடம் நகை பணம் கொள்ளை: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
X

பைல் படம்.

புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியில் வசித்து வருபவர் காத்தாயி (77). அவருடைய கணவர் அய்யமுத்து இறந்து விட்டதால் காத்தாயி தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று மாலை மூதாட்டி காத்தாயி வீட்டின் முன்பு கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கீழே இறங்கி வந்தார். அவர் மூதாட்டியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் தனக்கு தாகமாக இருப்பதாக கூறி, தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் சென்றார்.

இதையடுத்து அந்த பெண் மூதாட்டியிடம் உங்களின் நகை போல, நானும் நகை செய்ய வேண்டும், எனவே நகைகளை தன்னிடம் காண்பிக்குமாறு கூறியுள்ளார். அதை நம்பி காத்தாயி அலமாரியில் இருந்த 4 பவுன் தங்க செயினை எடுத்து அந்த பெண்ணிடம் காட்டியுள்ளார். பின்னர் அதை மீண்டும் அலமாரியில் வைத்துப் பூட்டிய மூதாட்டி, அங்கிருந்த தலையணைக்கு அடியில் சாவியை வைத்துவிட்டு வீட்டிற்கு வெளியில் அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார்.

மூதாட்டியுடன் வீட்டில் இருந்து வெளியில் வந்த பெண், தனக்கு மீண்டும் தண்ணீர் வேண்டும் என கூறி அவர் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு, அங்கிருந்த காரில் ஏறி சென்றார். அதைத்தொடர்ந்து மூதாட்டி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த 4 பவுன் தங்க செயின், அரை பவுன் மோதிரம் மற்றும் ரொக்கம் ரூ.35 ஆயிரம் திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து மூதாட்டி புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண், களங்காணி ரயில் நிலையம் அருகே வசித்து வருவதாக கூறியதும், நைசாக பேசி, மூதாட்டியை ஏமாற்றி நகை, பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. மேலும் காரை மற்றொரு நபர் ஓட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய பெண் மற்றும் காரை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர்.

Updated On: 28 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!