கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி

கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
X

Coimbatore News- கோவையில் இன்று மாலை மழை பெய்தது. 

Coimbatore News- கோயம்புத்தூர் மாநகரப் பகுதியில் இன்று மாலை பரவலாக கோடை மழை பெய்தது.

Coimbatore News, Coimbatore News Today- கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.

பகல் நேரத்தில் வெயில் அதிகம் இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவிலும் சில பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகரப் பகுதியில் இன்று மாலை பரவலாக கோடை மழை பெய்தது. கோவை வடக்கு பகுதிகளான துடியலூர், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை மற்றும் உக்கடம், காந்திபுரம், அவிநாசி சாலை ஆகிய பகுதிகளில் இன்று சுமார் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்தது.

குறிப்பாக உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்பகுதியில் இருந்த சில குழந்தைகள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி மழையை ரசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆங்காங்கே தூரல் மழை பெய்து வருவதால் இன்று நள்ளிரவும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பமாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளுமையாகவும் உள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கமும் குறைந்து இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!