/* */

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 இடங்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேசன் காடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தன் படி மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்கள் தாலுகா தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இம்மாதத்திற்கான, ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம், நாளை 11ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள 8 இடங்களில் நடைபெறுகிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள, தாலுகா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகளில் உள்ள தங்களின் குறைகளை தீர்த்துக்கொள்ளலாம். முகாமிற்கு செல்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 March 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’